வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

ஈஸ்டர் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.

Traffic police officer

One man, traffic warden standing on the street, speed test with police radar. Source: Getty / South_agency/Getty Images

ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், நாளை 6ம் திகதி இரவு 12.01 முதல் 10ம் திகதி இரவு 11.59 வரை சாலை விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.

அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.

சாலைவிதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.

உதாரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT-இல் வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துபவர்களுக்கு $352 அபராதமும் 10 demerit புள்ளிகளும் தண்டனையாக விதிக்கப்படும். இக்குற்றம் school zone-இல் இடம்பெற்றால் அபராதத்தொகை $469ஆக உயரும்.

அதேநேரம் ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ANZAC தினத்தையொட்டிய ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25ம் திகதி வரையான காலப்பகுதியிலும் double-demerit points தண்டனை விதிக்கப்படும்.

இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டிகைக்காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் Northern Territory-இல் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை.

இருப்பினும் சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கவென, விடுமுறைக் காலத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 5 April 2023 2:43pm
Updated 5 April 2023 3:08pm
Source: SBS

Share this with family and friends