ஈஸ்டர் விடுமுறையையொட்டி, கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் பயணிகள் சிட்னி விமான நிலைய terminals ஊடாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 23 வரை, ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு பயணிகள் மற்றும் 850,000 சர்வதேச பயணிகள் விமானநிலையத்திற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிட்னி விமான நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வெண்ணிக்கையில் 34 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் hand-luggage மட்டும் வைத்திருந்தால் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவும், checking in bags வைத்திருந்தால் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமாநிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சர்வதேச பயணிகள் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை பழைய நிலைமைக்கு மீண்டு வருவதாகவும், சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை ஈஸ்டர் 2022 இன் போது இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், சிட்னி விமான நிலையத்தின் CEO Geoff Culbert தெரிவித்தார்.
ஏப்ரல் 2019 உடன் ஒப்பிடும்போது இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு, அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்ட விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் Geoff Culbert கூறினார்.
ஈஸ்டர் விடுமுறைக்காலத்தில் சிட்னி விமான நிலையத்தினூடாக பயணிக்கும் மக்கள், சிரமம் இல்லாத பயணத்தை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சொந்த வாகனத்தில் செல்லும் பயணிகள் parking இடத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.