வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.

Double demerits

Source: Getty / Getty Images

இதன்படி ACT பிராந்தியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 23ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 3ம் திகதி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.

அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.

வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.

குறிப்பாக வாகனம் ஓட்டும் போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுநர்களுக்கு $352 அபராதம் (பள்ளி zoneஇல் $469) மற்றும் 10 demerit points தண்டனை விதிக்கப்படும்.

இதேவேளை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் double-demerit points தண்டனை 23ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 8 வரை நடைமுறையில் இருக்கும்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டிகைக் காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

NT, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends