தெற்கு ஆஸ்திரேலிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான Port Elliott பகுதியில் கிறிஸ்மஸ் தின விடுமுறையைக் கழிக்கச்சென்ற இந்திய இளைஞன், கரைக்கு வந்த பேரலையால் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த Sidhardha Reddy Vaddi (வயது 27 )என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவர் ஆவார்.
Port Elliott பகுதியில் அமைந்துள்ள Horseshoe Bay என்ற இடத்தில் கரையில் நின்றுகொண்டிருந்த இளைஞனை திடீரென்று வந்த பெரியதொரு அலை, பாறைகளுக்குள் அடித்துச்சென்றுவிட்டதாகவும், உயிர்காக்கும் படையினர் கடலில் பாய்ந்து இளைஞனைக் கரைக்குக் கொண்டுவந்தபோதும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படிப்புக்காக 2020 இல் சிட்னிக்குப் புலம்பெயர்ந்த Sidhardha Reddy Vaddi, கடந்த நவம்பர் மாதம் வேலை கிடைத்து, தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருக்கு குடிபெயர்ந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.