அனைத்து மாநிலங்களிலும் டிஜிட்டல் statutory declarations மற்றும் deeds-ஐ அறிமுகப்படுத்த ஆஸ்திரேலிய அரசு தயாராகிவரும் பின்னணியில், இதன் பலனாக ஆஸ்திரேலியர்கள் விரைவில் தங்கள் கடவுச்சீட்டை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டை புதுப்பித்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் பதிவு ஆகியவற்றை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசு இந்த டிஜிட்டல் statutory declarations மற்றும் deeds-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.
இதனடிப்படையில் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விரும்புபவர்கள் Justices of the Peaceஇன் கையொப்பத்துடனான ஆவணங்களுடன் தபால் அலுவலகத்திற்கு செல்லவேண்டிய தேவை முடிவுக்குவரும்.
மாறாக, ஆஸ்திரேலிய வரி அலுவலகத்தின் MyGovID செயலி மூலம் ஆஸ்திரேலியர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.
MyGov இணையதளம் மற்றும் செயலியில் இணைக்கப்பட்டவுடன் மின்னணு ஆவணங்களில் டிஜிட்டல் மின் கையொப்பங்களைப் பயன்படுத்தவும் இந்த அமைப்பு அனுமதிக்கும்.
புதிய டிஜிட்டல் statutory declarations மற்றும் deeds-ஐ சிறு வணிகங்களும் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம், இந்நடைமுறை விரைவுபடுத்தப்படும் போது ஆண்டுக்கு $400 மில்லியன் சேமிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.