ஆஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்பட்டுவரும் தடுப்புமுகாம்களில் சுமார் 8 ஆண்டுகளைக் கழித்துள்ள, Mohammad Ayub என்ற 80 வயதுகளிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளில் வயதில் மிகவும் மூத்தவராக இவரே இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ரொஹின்யா அகதியான Mohammad Ayub, கடந்த 2013ம் திகதி தனது இரு மகள்கள், மகன் மற்றும் மனைவியுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார்.
இதையடுத்து நவுறு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட இக்குடும்பம் 2019ம் ஆண்டு மருத்துவ தேவைகள் கருதி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு விடுதியில் தடுத்துவைக்கப்பட்டது.
பின்னர் Mohammad Ayub-இன் மகள்களும் மனைவியும் சிட்னிக்கு அனுப்பப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்ட அதேநேரம் Mohammad Ayub-உம் மகன் Sharif Ayub-உம் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
பிரிஸ்பனில் சுமார் இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 8 ஆண்டு தடுப்புமுகாம் வாழ்க்கைக்குப்பின்னர் தற்போது இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
தனது தந்தைக்கு ஆகக்குறைந்தது 83 வயதாவதாகத் தெரிவித்த Sharif Ayub, தடுப்புமுகாமிலிருந்த போது பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் மிகவும் சிரமப்பட்டார் எனவும் நாளொன்றுக்கு 23 மணிநேரங்களை அறையில் செலவிட்டதாகவும் தெரிவித்தார்.
தந்தையை முதியோர் பராமரிப்பு மையத்தில் அனுமதிப்பதற்கான தெரிவினை உள்துறை அமைச்சு வழங்கியதாகவும், ஆனால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தமக்கு விருப்பம் இல்லையெனவும் Sharif Ayub தெரிவித்துள்ளார்.
கலாச்சார, மத தேவைகள் நிமித்தம் தனது தந்தையைத் தானே கவனித்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.