சில வகை Bridging வீசாக்களுக்கு காகித விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது

Bridging A, B மற்றும் C விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் இணையத்தில் ஆன்லைன் படிவத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Australia Visa Approved

Australia Visa Approved with Rubber Stamp and flag Source: iStockphoto / mirsad sarajlic/Getty Images/iStockphoto

ஆகஸ்ட் முதலாம் தேதி முதல் Bridging A, B மற்றும் C வீசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களின் ImmiAccount மூலம் அல்லது உள்துறை அமைச்சின் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்பிக்கமுடியும். காகித அடிப்படையிலான விண்ணப்பம் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்திருக்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் Bridging A, B மற்றும் C வீசாவிற்கான காகித விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இடைக்கால வீசாவிற்கு விண்ணப்பிக்கும் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் பின் வரும் வீசாக்களுக்கு மட்டுமே இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்:
  • Bridging visa A – BVA – (subclass 010)
  • Bridging visa B – BVB – (subclass 020)
  • Bridging visa C – BVC – (subclass 030)

ImmiAccount மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் உள்துறை அமைச்சின் பின் வரும் இணையதளத்திற்கு சென்று படிவத்தை இணையத்தில் பூர்த்திசெய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Bridging visa E (BVE) - (subclass 050) வீசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் தொடர்ந்து காகித விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.






SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 24 August 2022 8:33am
Updated 24 August 2022 7:02pm
By Selvi
Source: SBS

Share this with family and friends