14 ஆண்டுகளுக்கும் மேலாக மெல்பனில் வசித்து வரும் 37 வயதான கிருஷ்ணகுமார் 2008 இல் மாணவர் விசாவில் இங்கு வந்தவர். தனது நிரத்திர வதிவிட கனவு இன்னும் நிறைவேற வில்லை என அவர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் ஜனவரி 2022-இல் 1.5 மில்லியன் பேர் தற்காலிக வீசாவில் இருந்ததாகவும் அதே போன்று 2019-இல் கோவிட் தொற்றுநோய் பரவல் தாக்கத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் இருந்ததாகவும் Grattan Institute தெரிவிக்கிறது.
மாணவர் வீசா போன்ற வீசாவில் இங்கு வந்தவர்கள் தங்களின் கற்கை முடிந்த பின் நிரத்திர வீசாவிற்கு மாநில அல்லது பிராந்தியங்களின் நியமனத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த புள்ளி வரம்பு மாறிக்கொண்டே இருப்பதினால் ஒவ்வொரு முறையும் தான் தகுதி இழப்பதாக இந்திய தமிழ் பின்னணி கொண்ட செல்வன் கூறுகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் எளிதாக நிரந்தர வதிவிடப் பாதைகளை வழங்கும் உறுதிமொழியுடன், Albanese அரசு வெளிநாட்டு விண்ணப்பதார்களுக்கு புதிய திறன் அடிப்படையிலான வீசா செயலாக்க முன்னுரிமைகளை அறிமுகப்படுத்தியது.
ஆனால் ஏற்கனவே இங்கு தற்காலிக வீசாவில் உள்ள பல திறமையான மற்றும் தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் நிரந்தர விசாவைப் பெறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கல்வி, பணி அனுபவம், ஆங்கில மொழித் திறன் மற்றும் வயது உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட புள்ளிகள் முறையின் அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர வீசா வழங்கப்படுகிறது.
ஏற்னவே நாட்டில் தற்காலிக வீசாவில் உள்நாட்டு பணி அனுபவத்துடன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அழைப்புகள் வலுத்து வருகின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.