மாணவர் வீசா விண்ணப்பங்கள் வேகமாக பரிசீலனை செய்யப்படுவது, மாணவர்களுக்கு இங்கு வரம்பற்ற வேலை நேரம் மேலும் மாணவர் வீசா வைத்திருப்பவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றினால் சீனாவை முதல் முறையாக இந்திய முந்தியுள்ளது.
கோவிட் பேரிடருக்கு முந்தைய நிலைகளுக்கு மாணவர் வீசா விண்ணப்பங்கள் உயர்ந்து வரும் நிலையில் இந்தியா மற்றும் துணைக் கண்டத்தில் இருந்தும் மாணவர் வீசாவிற்கான விண்ணப்பங்கள் முனைப்புடன் சமர்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுக் கல்வித் துறையில் ஒரு பெரிய மீளுருவாக்கம் செய்யத் தயாராகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவுக்கான மாணவர் வீசா விண்ணப்பங்களில் இந்தியா அதிகரித்து வருகிறது

Top five nationalities and then others for student visa lodgements compared (01/07/2019 to 31/12/2019; and same period for 2022). Credit: Department of Home Affairs

Universities Australia Chief Executive Catriona Jackson. Source: Supplied / Universities Australia
2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 இந்திய மாணவர்கள் உள்ளனர் என உற்சாகமாக ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களின் தலைமை நிர்வாகி Catarina Jackson தெரிவித்தார்.
எங்களிடம் நல்ல கற்கைநெறி உள்ளது, அவர்களுக்கு (இந்திய மாணவர்கள்) அது தெரியும்.ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களின் தலைமை நிர்வாகி Catarina Jackson
சர்வதேச மாணவர்களின் ஆர்வத்தின் அளவு நேபாளத்திலும் அதிகரித்து வருகிறது, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதி ஆறு மாதங்களில் நேபாளத்தில் இருந்து 18,405 மாணவர் வீசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன அதைத் தொடர்ந்து கொலம்பியா (13,321) மற்றும் பிலிப்பைன்ஸ் (11,879) ஆகியவை மாணவர் வீசா விண்ணப்பங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

Indian international students lead university boom in Australia. Credit: Public Domain
ஜூன் 2023 வரை மாணவர் வீசா வைத்திருப்பவர்களுக்கு வரம்பற்ற வேலை நேரம் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
"அவுஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பதை சர்வதேச மாணவர்களும் அறிந்திருப்பார்கள், மேலும் இங்கு படிப்பது மட்டுமல்லாமல், பட்டம் பெற்றவுடன் தொடர்ந்து வேலை செய்ய வாய்ப்பு உள்ளது" என்று Catarina Jackson கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த பெடரல் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று Anthony Albanese பிரதமராக பதிவியேற்றபோது நிலுவையில் இருந்தாக கூறப்பட்ட சுமார் ஒரு மில்லியன் வீசா விண்ணப்பங்களில் சுமார் 400,000 வீசா விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 2.2 மில்லியன் சுற்றுலா வீசாக்கள், 370,000 மாணவர் வீசாக்கள் மற்றும் 64,000 தற்காலிக திறன் வீசாக்கள் ஆகும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.