இந்த திட்டம் அறிமுகமாகும் முதல் ஆண்டில் சுமார் 10,000 அமெரிக்கர்கள் அகதிகளுக்கு ஆதரவு வழங்கி sponsor செய்யும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க குடியுரிமை கொண்ட சாமானிய மக்களும் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் Welcome Corps என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா அதிபர் Joe Biden அறிமுகப்படுத்தினார்.
Welcome Corps நான்கு தசாப்தங்களில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுவதாக Secretary of State Antony Blinken தெரிவித்தார்.
Welcome Corps திட்டத்தில் sponsor-ஆக இணைய விரும்புவார்கள் தன்னார்வல தொண்டராக இருக்க வேண்டும் மேலும் அமெரிக்காவில் புதிதாக குடியேறும் அகதிகள் வேலை தேடும் போது, குளிர்கால ஆடைகள், தளபாடங்கள் மற்றும் வீட்டிற்கான பாதுகாப்பு வைப்புத்தொகை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மூன்று மாதங்களுக்கு உதவ ஒரு அகதிக்கு $3,293 வழங்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அண்டை நாடான கனடாவில் அகதிகளை குடியமர்த்த நடைமுறையில் உள்ள திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதை பார்த்தபின் உக்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களுக்காக இந்த Welcome Corps திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபர் Joe Biden , ஒரு வருடத்திற்கு 125,000 அகதிகளை அமெரிக்கா உள்வாங்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார். இதன் மூலம் முந்தைய அதிபர் Donald Trump அகதிகளை உள்வாங்குவதில் கொண்டு வந்த கடுமையான குறைப்புகளை அவர் மாற்றியமைத்துள்ளார்.
ஆனால் தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 6,750 அகதிகள் மட்டுமே மீள்குடியேற்றப்பட்டனர். கோரிக்கைகளை செயலாக்குதல் மற்றும் சரிபார்ப்பதில் நிலவும் நீண்ட தாமதமே இந்த குறைவான எண்ணிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதகிகளுக்காக குரல் கொடுப்பவர்கள், மத தலைவர்கள் உட்பட பலர் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். Airbnb உள்ளிட்ட வணிகங்கள் Welcome Corps திட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தன.
Biden நிர்வாகத்தின் இந்த Welcome Corps திட்டம் முன்னோக்கிய சிந்தனை அணுகுமுறை என்று பாராட்டிவுள்ள Lutheran Immigration and Refugee Service நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Krish O'Mara Vignarajah இந்த நிதியாண்டில் வருந்தத்தக்க வகையில் குறைவாக இருக்கும் அகதிகள் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கு Biden நிர்வாகம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஐ.நா புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு வரை உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்,
ஆப்கானிஸ்தான், வெனிசுலா, மியான்மர் மற்றும் புர்கினா பாசோ உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பிரச்சனையினால் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.