வெப்பமான நாட்களில், வியர்வை வெளியேறுவது நம் உடலின் இயற்கையான செயல்முறையாகும்.
இருப்பினும், விதிவிலக்காக வெப்பமான நாட்களில், heat exhaustion அல்லது heat stroke போன்ற கடுமையான நிலைமைகளை ஒருவர் அனுபவிக்கலாம்.
வியர்வை ஊடாக உடல் கணிசமான அளவு உப்பு மற்றும் தண்ணீரை இழக்கும்போது, heat exhaustion ஏற்படுகிறது.
மறுபுறம், heat stroke என்பது மிகவும் தீவிரமான நிலை. உடல் அதன் உள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிடுவதால், இது மருத்துவ அவசரநிலையாகக் கருதப்படுகிறது.
Heat exhaustion அல்லது heat strokeக்கு எதிரான முக்கிய தடுப்பு நடவடிக்கை நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதாகும்.
Stay hydrated throughout the day as a critical preventive measure against heat exhaustion. Credit: The Good Brigade/Getty Images
போதியளவு திரவ உட்கொள்ளல் மற்றும் உணவுத் தேர்வுகள் இரண்டுடன் கூடுதலாக, தோலைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை Dr Angelica Scott வலியுறுத்துகிறார்.
இலகுவான ஆடைகளை அணிவது, வீட்டிற்குள் அல்லது நிழலான பகுதிகளில் இருப்பது தவிர, SPF 50 அல்லது அதற்கு மேற்பட்ட பொருத்தமான Sunscreen-ஐப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.
புற்றுநோய் கவுன்சிலின் தேசிய தோல் புற்றுநோய் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் Anne Cust-உம் ஆஸ்திரேலியாவில் நிலவும் தீவிர UV கதிர்வீச்சு காரணமாக Sunscreen பயன்படுத்துவதன் அவசியத்தை எதிரொலிக்கிறார்.
சூரியனால் உமிழப்படும் ஆற்றலின் ஒரு வடிவமான இந்த புற ஊதா கதிர்வீச்சு தோல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணமாக உள்ளது எனவும் அவர் விளக்குகிறார்.
ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்களில் கோடை மாதங்களில் UV Index சுமார் 12 முதல் 14 என்ற மிக அதிகளவில் காணப்படும் எனவும் அவர் கூறுகிறார்.
Most places in Australia have a UV index that peaks at around 12 to 14 in the summer months Credit: Six_Characters/Getty Images
தோல் புற்றுநோய் தடுப்பு தொடர்பில் உலகின் மிக நீண்ட காலமாக இயங்கும் திட்டங்களில் ஒன்றான SunSmart, சூரிய பாதுகாப்பு தொடர்பில் விக்டோரியாவில் ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது.
''Don’t Let Cancer In'' என்று பெயரிடப்பட்ட இந்த பிரச்சாரம், கடற்கரைகளுக்குச் செல்லும்போது அல்லது நீர் விளையாட்டுக்களின்போது மட்டும் சூரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலதிகமாக தினசரி நடவடிக்கைகளிலும் இவற்றைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறது.
மக்கள் வெளியில் செல்வதற்கு முன், தங்களது பகுதியில் UV அளவு எப்படி இருக்கிறது என்பதை SunSmart Global UV என்ற செயலியைத் தரவிறக்கம் செய்வதன்மூலம் அறிந்துகொள்ளலாம் என SunSmartஇன் தலைவர் Emma Glassenbury சொல்கிறார்.
UV அளவு 3 மற்றும் அதற்கு மேல் இருக்கும் போது, பாதுகாப்பான ஆடைகள், அகலமான விளிம்புள்ள தொப்பி மற்றும் sunglasses அணிதல், ஆடையால் மூடப்படாத தோலின் பகுதிகளுக்கு sunscreen பயன்படுத்துதல் மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக நிழலைத் தேடுதல் போன்ற ஐந்து வகையான சூரிய பாதுகாப்பையும் மேற்கொள்வதன் மூலம் கோடைகாலத்தை குளிர்மையுடன் அனுபவிக்கலாம் என Emma Glassenbury சுட்டிக்காட்டுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand