ஆஸ்திரேலியாவில் உங்கள் காரை விற்பனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை

Australia Explained - Selling your Car - Young Man Taking a Picture of His Car

Credit: XiXinXing/Getty Images

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இடத்தைப் பொறுத்து second-hand கார் விற்பனை வேறுபடும். உங்கள் வாகன விற்பனை அனுபவத்தை வெற்றிகரமாகவும் மன அழுத்தமின்றியும் வழிநடத்த உதவும் சில குறிப்புகள் அடங்கிய விவரணம் இது. ஆங்கில மூலம் Zoe Thomaidou தமிழில் றேனுகா துரைசிங்கம்


நீங்கள் பயன்படுத்திய காரிடமிருந்து விடைபெறும் நேரம் வரும்போது, அதை நன்றாகக் கழுவி, service புத்தகத்தைக் கொடுத்து, காருக்கான பணத்தைப் பெறுவதை விட நீங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்கள் வாகனத்தை விற்கும்போது நிபந்தனைகள் மாறுபடும்.

உங்கள் காரை விற்பனைக்குத் தயார் செய்வது முதல் விற்பனையை முடிப்பது வரை, உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு கார் விற்பனை பற்றிய செயல்முறை மற்றும் பரிந்துரைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை விற்பனை செய்யும்போது, அதுகுறித்த தரவைச் சேகரிக்கும் அதிகாரம் படைத்த நிறுவனம் நாடுதழுவிய ரீதியில் இல்லை.

என்றாலும், ஆஸ்திரேலியாவின் புதிய வாகனச் சந்தையை விட, பழைய வாகனச் சந்தை சுமார் மூன்று மடங்கு பெரிதாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
Australia Explained - Selling your Car - Automobile For Sale
Credit: Alan Powdrill/Getty Images
ஒரு second-hand காரின் விற்பனையாளராக முதலில் நீங்கள் அதை எப்படி விற்க விரும்புகிறீர்கள் என்ற முடிவை எடுப்பதே உங்கள் காரை விற்கும் செயல்முறையின் முதல் படி என்கிறார் New South Wales Fair Tradingஇன் Regulatory Engagement நிர்வாகி Kathy Townsend.

குறிப்பாக உங்கள் காரை ஒரு வியாபாரி மூலம் விற்கலாம், அல்லது ஒரு ஏல நிறுவனம் மூலம் விற்கலாம் அல்லது பல்வேறு விற்பனை தளங்களில் ஒன்றைப் பயன்படுத்தி நீங்களே நேரடியாக விற்கலாம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பொதுவாக உங்களது classic மற்றும் collector vehiclesஐ விற்கும்போது வழக்கமாக இருக்கும் ஒரு டீலர் அல்லது ஏல நிறுவனம் மூலம் அதனை விற்பனை செய்வது, வீண் தொந்தரவுகளைக் குறைக்கிறது. ஆனால் இந்தச் செயன்முறையில் உங்கள் விற்பனை விலையை நீங்கள் அதிகரிக்க முடியாது.

கார் டீலர் மூலம் விற்பனை செய்யும்போது அதில் அடங்கியுள்ள செலவுகளைக் கருத்தில் கொள்வது முக்கியம், ஏனெனில் அவர்களும் தமக்கென ஒரு லாபம் வைத்துத்தான் அதனை விற்பார்கள்.

அதேபோன்று நீங்கள் ஒரு ஏல நிறுவனத்தைத் தேர்வுசெய்தால், விற்பனை விலையில் சராசரியாக 10-15 சதவிகிதம் கமிஷனாக நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கவேண்டியிருக்கலாம்.
Australia Explained - Selling your Car - on phone line
concerned Asian Chinese mature woman comparing financial bill statement with bank on phone line Credit: Edwin Tan /Getty Images
இதேவேளை நீங்களே நேரடியாக ஒருவருக்கு வாகனத்தை விற்பனை செய்கிறீர்கள் என்றால் உங்கள் வாகனத்தின் registration papersஐ தயாராக வைத்திருப்பது அவசியம்.

ஏனெனில் வாகனத்தை வாங்க விரும்பும் எவரும், நீங்கள்தான் அந்த வாகனத்தின் உண்மையான உரிமையாளர் என்பது உட்பட வாகனப் பதிவு ஆவணங்களைச் சரிபார்க்க விரும்புவார்கள்.

நீங்களே நேரடியாக உங்கள் காரை விற்பனை செய்வது எனத் தீர்மானித்தால் உங்கள் காரை விளம்பரப்படுத்தும்போது, வாகனத்தின் நிலை தொடர்பில் நேர்மையாக இருப்பது முக்கியமானது.

காரின் வரலாறு மற்றும் அதை வாங்குபவர் தெரிந்துகொள்ளவேண்டிய ஏதேனும் குறைபாடுகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம்.

வாகனத்தை வாங்குவதற்கு விரும்புபவர்களின் கேள்விகளுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பது முக்கியமானது. இது விரைவான மற்றும் வெற்றிகரமான விற்பனைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
Australia Explained - Selling your Car -  woman driving a car
Australia Explained - Selling your Car - woman driving a car Credit: FG Trade/Getty Images
இதேவேளை வாகனத்தின் விலையை நிர்ணயிக்கும் முன் உங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வது முக்கியமானது. வாகனத்தின் உண்மையான சந்தை மதிப்பைச் சுற்றி விலையை நிர்ணயம் செய்வது வாகனத்தை வாங்குபவர்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாகனத்தை விற்பனைக்கு விடுவதற்கு முன்னர் அதனை service செய்து, தேவையேற்படின் டயர்களை மாற்றுவது உட்பட முக்கியமான திருத்தவேலைகளைச் செய்வது, வாகனத்தை வாங்குவதற்கென பேச்சு நடத்துபவர்களை ஈர்க்கும் என்கிறார் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் ஆட்டோமொபைல் கிளப்பில் வாகனங்கள் மற்றும் எரிபொருள் மேலாளராக உள்ள Alex Forrest.

இருப்பினும், உங்கள் வாகனத்தை விற்பனை செய்வதற்கு முன், தேவைக்கு மேலதிகமான மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்களைச் செய்வது எப்போதும் அவசியமில்லை.
Mechanic fixes engine
Australia Explained - Mechanic fixes engine Credit: Reza Estakhrian/Getty Images
வாகனத்தை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்வதில் உள்ள சிக்கல், வாகனத்தை வாங்க விரும்புபவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து வாகனத்தை பார்வையிடுவது மற்றும் சோதனை செய்வது சிலருக்கு அசௌகரியமாக இருப்பதாகும்.

இப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுடன் ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம் எனவும், வாகனத்தை வாங்க விரும்புபவர் test drive செய்ய விரும்பினால் அவரை shopping centre car park போன்ற ஒரு பொது இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யலாம் எனவும் பரிந்துரைக்கிறார் Carsalesஇன் நுகர்வோர் சந்தைப்படுத்தல் மேலாளர் Kara Faella.

உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து, உங்கள் வாகனத்தை விற்பனை செய்வதற்கு முன், அதற்குரிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்ப்பது அவசியம்.

உதாரணமாக விக்டோரியாவில், ஒரு வாகனத்தை வாங்கும் போதும் விற்கும் போதும், அது சாலையில் ஓட்டுவதற்குத் தகுதியானதுதான் என்பதை உறுதிப்படுத்தும் roadworthy சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Car repairman giving car keys to customer
Car repairman giving car keys to customer after success car repairing in garage Source: Moment RF / thianchai sitthikongsak/Getty Images
உங்கள் காரை நீங்கள் விற்றவுடன், மூன்று முக்கியமான அம்சங்களை கவனிக்க வேண்டும். முதலாவது உங்கள் insurance மற்றும் roadside assistance சேவை வழங்குநர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இரண்டாவது உங்களது tollway கணக்கு உங்களது அடுத்த வாகனத்திற்கு மாற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மூன்றாவது உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள மோட்டார் பதிவு அலுவலகத்திற்கு நீங்கள் வாகனத்தை விற்றுவிட்டதைத் தெரிவிக்க வேண்டும்.

இதேவேளை வாகன உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள், வாகனப் பரிமாற்றம் மற்றும் அப்புறப்படுத்தல் ஆகியவை நாடு முழுவதும் வேறுபடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் வாகனம் விற்கப்பட்டுவிட்டமையை சம்பந்தப்பட்ட தரப்பிற்கு உடனடியாக அறியத்தருவது தேவையற்ற பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க உதவும் என New South Wales Fair Tradingஇன் Regulatory Engagement நிர்வாகி Kathy Townsend வலியுறுத்துகிறார்.

உங்கள் காரை விற்றுவிட்டீர்களென்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஆஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து கீழுள்ள இணைப்புகளுக்குச் சென்று அறிந்துகொள்ளலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share