Voice தொடர்பிலான கருத்து வாக்கெடுப்பு என்பது என்ன, அது ஏன் நடத்தப்படுகிறது?

CANBERRA RECONCILIATION WEEK STOCK

The moon is seen behind the Australian flag, the Indigenous flag and the flag of the Torres Strait Islands flying outside Parliament House to mark Reconciliation week in Canberra, Tuesday, May 30, 2023. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

ஆஸ்திரேலியர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் Indigenous Voice to Parliament கருத்து வாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ள நிலையில், இந்தச் செயல்முறை பற்றியும் இது ஏன் நடைபெறுகிறது என்பது பற்றியும் விளக்கும் விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

Indigenous Voice to Parliament என்ற அமைப்பு ஊடாக இந்நாட்டின் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களை அரசியலமைப்பில் அங்கீகரிப்பதற்காக அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டுமா என்பதைக் குறித்து 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கவிருக்கும் கருத்து வாக்கெடுப்பின்மூலம் மக்கள் தங்கள் கருத்தைக் கூறவேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே Voice to Parliament என்றால் என்ன, கருத்து வாக்கெடுப்பு என்றால் என்ன, வாக்களிக்க யார் தகுதியுடையவர்கள் எனப் பார்ப்போம்.

Voice என்பது பூர்வீக குடி மக்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து முறையான கருத்துகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கான அமைப்பாகும்.

பூர்வீகக்குடி சமூகங்களின் விருப்பத்தின் அடிப்படையில் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு, பூர்வீகக்குடி மக்களைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கும் அரசிற்கும் சுயாதீனமாக ஆலோசனை வழங்கும்.

இந்த அமைப்பை நிறுவ ஏதுவாக அரசியலமைப்பை திருத்த விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
YES 23 VOICE CAMPAIGN SYDNEY
A supporter is seen with the Aboriginal flag painted on her face in support of the vote hold placards during a Yes 23 community event in support of an Indigenous Voice to Parliament, in Sydney, Sunday, July 2, 2023. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE
கருத்து வாக்கெடுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பை மாற்றுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான தேசிய வாக்கெடுப்பு ஆகும். அரசியலமைப்பை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அதற்கான ஒரே வழி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மட்டுமே எனவும் விளக்குகிறார் ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் (AEC) செய்தித் தொடர்பாளர் Evan Ekin-Smyth சொல்கிறார்.

பெடரல் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அரசியலமைப்பு வரையறுக்கிறது. மாநில மற்றும் பெடரல் நாடாளுமன்றங்களால் என்ன சட்டங்களை உருவாக்க முடியும் என்பது உட்பட காமன்வெல்த், மாநிலங்கள் மற்றும் மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கான அடிப்படையை இது தீர்மானிக்கிறது.

நடைபெறவுள்ள கருத்து வாக்கெடுப்பில் கேட்கப்படவுள்ள கேள்வியைப் பார்ப்போம்.
“முன்மொழியப்பட்ட ஒரு சட்டம்: Voice என்ற அவையை நிறுவுவதனூடாக இந்நாட்டின் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களை ஆஸ்திரேலியாவின் முதற்குடிகளாக அரசியலமைப்பில் அங்கீகரிப்பதற்காக அரசியலமைப்பை மாற்றுவது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?"
என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' என்று வாக்களிக்குமாறு மக்கள் கேட்கப்படுவார்கள்:

கருத்து வாக்கெடுப்பு வெற்றிபெற, இரட்டைப் பெரும்பான்மை தேவை. அதாவது பெரும்பான்மையான மாநிலங்களில் பெரும்பான்மையான வாக்காளர்கள் ‘ஆம் என்று வாக்களிக்க வேண்டும் அத்துடன் தேசிய அளவில் பெரும்பான்மையான வாக்காளர்கள் ‘ஆம் என்று வாக்களிக்க வேண்டும் என்று விளக்குகிறார் AEC செய்தித் தொடர்பாளர் Evan Ekin-Smyth.
JACINTA PRICE VOICE PRESSER
Country Liberal Party Senator Jacinta Nampijinpa Price walks with a young Indigenous woman wearing an Australian flag ahead of a press conference at Parliament House in Canberra, Wednesday, March 22, 2023. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE
Voice என்ற அமைப்பின் உறுப்பினர்கள் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் பிரதிநிதியாக, இளையோரையும் உள்ளடக்கி பாலின சமநிலை பேணப்பட்டு Voice என்ற அமைப்பு இயங்கும்.

நாடாளுமன்றத்திற்கும் அரசிற்கும் சுயாதீனமான ஆலோசனைகளை Voice என்ற அமைப்பு வழங்கும்.

திட்டங்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து Voice என்ற அமைப்பு கருத்துக் கூற முடியும், ஆனால் அது நிதி நிர்வகிக்கவோ அல்லது சேவை வழங்கவோ முடியாது.

தீர்மானங்களைத் தடை செய்யும் ‘வீட்டோ’ அதிகாரம் Voice என்ற அமைப்புக்கு இருக்காது.

மற்ற நாடுகளும் இதே மாதிரியான முன்னெடுப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக கூறுகிறார் Voice தொடர்பிலான நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவரும் NSW பல்கலைக் கழகத்தின் அரசியலமைப்புச் சட்டத்துறை தலைவரும், பூர்வீக குடி பின்னணிகொண்டவருமான பேராசிரியர் Megan Davis.
Voice அமைப்பு ஆஸ்திரேலியாவின் முதற்குடிகளுக்கான சுயநிர்ணய உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று, பூர்வீக குடி பின்னணிகொண்டவரும் Voice உருவாக்கப்படுவதை வலியுறுத்தும் ‘From the Heart’ பிரச்சாரத்தின் இயக்குனருமான Dean Parkin நம்புகிறார்.

ஏனெனில் தனது சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு அறிந்த மக்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Voice அமைப்பு தொடர்பில் ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமக்கள் பலவிதமான அரசியல் கருத்துக்களைக் கொண்டுள்ளனர், சிலர் Voice அமைப்புக்கான முன்மொழிவுடன் உடன்படவில்லை. இதில் பூர்வீககுடி பின்னணிகொண்ட முக்கிய அரசியல்வாதிகளும் அடங்குவர்.

Northern Territory Country லிபரல் செனட்டர் Jacinta Price மற்றும் லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் Warren Mundine ஆகியோர் Voice அமைப்புக்கு எதிரான ‘இல்லை’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். பூர்வீகக்குடிமக்களின் பிரச்சினைகளை Voice அமைப்பால் தீர்க்கமுடியாது என அவர்கள் வாதிடுகின்றனர்.

வாக்கெடுப்பு நெருங்க நெருங்க, Voice அமைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் 'ஆம்' மற்றும் 'இல்லை' பிரச்சாரங்களை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையமானது 17 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கான தகவல்கள் அடங்கிய பிரச்சாரத்தை உருவாக்குவதாக அதன் செய்தித் தொடர்பாளர் Evan Ekin-Smyth கூறினார்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆஸ்திரேலியர்களை சம்மதிக்கவைப்பது எளிதானது அல்ல. 1901ல் ஆஸ்திரேலியா Federation ஆனது முதல், மாற்றத்திற்கான 44 முன்மொழிவுகளில் எட்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

பூர்வீககுடிப் பின்னணிகொண்டவர்கள் தொடர்பில் கடைசியாக 1967 ஆம் ஆண்டு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் வெற்றியானது பூர்வீககுடிமக்களை காமன்வெல்த் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களாக அங்கீகரிக்க அனுமதித்தது. இதன் காரணமாக அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

வரவிருக்கும் கருத்து வாக்கெடுப்பில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

உங்களுக்குத் தரப்படும் வாக்குச் சீட்டில் நீங்கள் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்கள் உட்பட பல உதவிகள் கிடைப்பதாக கூறுகிறார் இந்த ஆணையத்தைச் சேர்ந்த Pat Callanan.

நீங்கள் தேர்தல்களில் வாக்களிக்க பதிவு செய்திருந்தால், கருத்து வாக்கெடுப்பில் வாக்களிக்க தகுதி பெறுவீர்கள்.

அதாவது, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் கருத்து வாக்கெடுப்பில் வாக்களிப்பது கட்டாயமாகும்.

உங்கள் பதிவை aec.gov.auஇல் சரிபார்ப்பதுடன் உங்கள் விவரங்கள் அனைத்தும் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Uluru
Uluru, also known as Ayers Rock is seen under the Aboriginal flag during the official ceremony to celebrate the closure of the climb at Uluru. Source: AAP / AAP Image/Lukas Coch
Voice அமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், இந்த கருத்துவாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிப்பது முக்கியம் என Evan Ekin-Smyth வலியுறுத்துகிறார்.

இக்கருத்து வாக்கெடுப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறும் முக்கியமான இந்த விடயத்தில் அனைவரும் கலந்துகொண்டு தமது பதிலை வழங்குவது அவசியம் எனவும் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த Pat Callanan விளக்குகிறார்.
Stay informed on the 2023 Indigenous Voice to Parliament referendum from across the SBS Network, including First Nations perspectives through NITV. Visit the to access articles, videos and podcasts in over 60 languages, or stream the latest news and analysis, docos and entertainment for free, at the .

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share