பெரும்பாலும், ஆஸ்திரேலிய சாலை விதிகள் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.
அந்தவகையில் ஒரு bus lane-பேருந்து பாதையில் பயணம் செய்வதற்கான அடிப்படை விதிகள் நாடு முழுவதும் மிகவும் பொதுவானவை.
அதாவது நீங்கள் சாலையில் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ அல்லது உங்கள் பாதையில் உள்ள இடையூறைத் தவிர்ப்பதற்காகவோ (வலதுபுறம் திரும்பவென ஒரு கார் நின்றால்) 100m தூரம் வரை பேருந்துப் பாதையில் காரோட்டலாம்.
வலதுபுறம் திரும்பும் வாகனத்தை முந்திச் செல்ல பேருந்துப் பாதையைப் பயன்படுத்த முடியுமா?
ஆம். பேருந்துப் பாதையில் பயணிக்க இந்த சந்தர்ப்பம் அனுமதிக்கிறது.
பேருந்துப் பாதையில் யாரெல்லாம் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பொது பேருந்துகள், டாக்சிகள், வாடகை கார்கள் (limousines) மற்றும் அவசர சேவை வாகனங்கள் ஒரு பேருந்து பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களும் அனுமதிக்கப்படுகின்றன. தனியார் ride-share கார்கள் (Uber போன்றவை) அல்லது தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படாது. சில பேருந்துப் பாதைகளில் Buses Only என்று மட்டுமே குறிக்கப்பட்டிருந்தால் இதில் பேருந்துகள் மட்டுமே பயணிக்க முடியும்.
விக்டோரியா மாநிலத்தைப் பொறுத்தவரை பல பேருந்துப் பாதைகள் குறிப்பிட்ட நேரங்களில் இயங்குகின்றன. எனவே பேருந்துப் பாதையில் குறிப்பிடப்பட்டுள்ள நேர அறிவித்தல் பலகைகளை ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டும்(பொதுவாக peak hoursக்கு வெளியே)
அதேபோன்று விக்டோரியாவில் பொதுப் பேருந்துகள் மற்றும் சைக்கிள்கள் மட்டுமே பேருந்துப் பாதைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.