கங்காருவுடன் கார் மோதிய விபத்தில் இந்திய இளைஞர் பலி! இருவர் காயம்!!

QLD Accident

Source: QLD Police, Gofundme

சிட்னியிலிருந்து குயின்ஸ்லாந்து சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கங்காருவுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இந்திய இளைஞர் ஒருவர் மரணமடைந்த நிலையில், அவரது சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜு சிகாட்டி என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

கல்வி கற்பதற்காக ஆஸ்திரேலியா வந்த ராஜு, 2020ம் ஆண்டு  Master of networking கற்கைநெறியைப் பூர்த்திசெய்துவிட்டு தற்காலிக விசாவுடன் சிட்னியில் தங்கியிருந்து வேலைசெய்துவந்துள்ளார்.

இந்நிலையில் குயின்ஸ்லாந்தின் புறநகர் பகுதியில் சிக்கிக்கொண்ட நண்பர்கள் சிலருக்கு உதவும் நோக்கில் ராஜு தனது நண்பர்களுடன் சென்றபோது, Carnarvon Highway-இல், St George அருகே கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு விபத்து சம்பவித்திருக்கிறது.

வீதியின் குறுக்காக வந்த கங்காரு ஒன்று காருடன் மோதுண்டதையடுத்து கட்டுப்பாட்டையிழந்த கார் அங்கிலிருந்த மரத்துடன் மோதியதில் ராஜு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காரை ஓட்டிச்சென்றவரும் மற்றொருவரும் காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர். கங்காருவும் மரணமடைந்துள்ளது.

இதையடுத்து ராஜுவின் சடலத்தை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜுவின் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், ராஜுவின் சடலத்தை அனுப்புவதற்கான செலவுக்கென Gofundme ஊடாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 1 லட்சம் டொலர்களுக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 7 January 2022 5:48pm
Updated 7 January 2022 6:12pm
Presented by Renuka

Share this with family and friends