ஆஸ்திரேலியாவுக்கான Skilled மற்றும் பெற்றோர் விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது

லேபர் அரசின் நிதிநிலை அறிக்கையில் குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:

Visa label

Source: AAP

ஆஸ்திரேலியாவுக்கான பெற்றோர் விசாக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் அதேநேரம், skilled விசாக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படவுள்ளதாக லேபர் அரசின் புதிய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முந்தைய Morrison அரசு, உள்துறை அமைச்சுக்கான migration program நிதியை $875 மில்லியனால் குறைத்திருந்த நிலையில், தற்போது $576 மில்லியன் கூடுதல் நிதி உள்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கென ஒதுக்கப்படும் இக்கூடுதல் நிதி, விசா பரிசீலனைக்கும், கடல்கடந்த தடுப்பு மையங்களின் பராமரிப்புக்கான நிதி பற்றாக்குறையை ஈடுகட்டவும் மற்றும் அகதிளுக்கு உதவுவதற்காகவும் உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.

விசா பரிசீலனை காலப்பகுதியை விரைவுபடுத்தவென கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஏதுவாக மேலதிகமாக $36.1 மில்லியனை ஒதுக்குவதாக Albanese அரசு முன்னரேயே அறிவித்திருந்தது. அதேபோன்று skilled migrants மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்களை உள்ளடக்கிய permanent migration திட்டத்தை 160,000 விசா இடங்களிலிருந்து 195,000 ஆக ஆக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி skilled விசாக்களின் எண்ணிக்கை 79,600 இலிருந்து 142,400 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதில் employed sponsored, skilled independent, regional அத்துடன் state and territory nominated விசாக்கள் அடங்கும்.

Skilled விசாக்களுக்கான முன்னுரிமை வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும், பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நியூசிலாந்து நாட்டவர்களுக்கும் வழங்கப்படும்.

பெற்றோர் விசாக்களுக்கான ஒதுக்கீடு 2021/22ல் 4,500 ஆக காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 8,500 ஆக இது உயர்த்தப்படுகிறது. Partner மற்றும் child விசாக்கள் தேவைக்கேற்ப வழங்கப்படும். இவற்றில் எந்த வரம்பும் இல்லை.
A breakdown of the skilled visas available in the 2022/23 budget.
A breakdown of the skilled visas available in the 2022/23 budget. Credit: A breakdown of the skilled visas available in the 2022/23 budget.
இதேவேளை குடிவரவு திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்றாலும், பசிபிக் தீவு நாடுகள் மற்றும் Timor-Leste ஐச் சேர்ந்தவர்களுக்கு, புதிய Pacific Engagement விசாவை அரசு அறிமுகப்படுத்தும்.

இதனூடாக, அடுத்த ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் 3,000 இடங்கள் வரை கிடைக்கும், இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 195,000 permanent migration இடங்களுக்கு மேலதிகமாக ஒதுக்கப்படும் இடங்களாகும்.

Humanitarian visa program- அகதிகளுக்கான மனிதாபிமான திட்டத்தின்கீழ் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மனிதாபிமான திட்டம் 2022-23 இல் 13,750 அகதிகளுக்கான இடங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக 16,500 இடங்கள்(அடுத்த 4 ஆண்டுகளுக்கு) ஆப்கானிய அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குடிவரவு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் $935 மில்லியன் வரி வருவாயைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 25 October 2022 9:11pm
Updated 29 October 2022 11:15pm
Source: SBS

Share this with family and friends