பெர்த் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில், இலங்கைப் பின்னணிகொண்ட தமிழ் தம்பதியர் மரணமடைந்துள்ளனர். அவர்களது மகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நவம்பர் 5ம் திகதி Leeming எனுமிடத்தில் South Street மற்றும் Benningfield Road சந்தியில் மதியம் 2.45 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
Toyota Camry ஒன்றும் Toyota Echo ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 87 வயது ஆணும் அவரது மனைவியும்(81 வயது) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர்கள் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட சின்னப்பு நடேசபிள்ளை மற்றும் புவனேஸ்வரி நடேசபிள்ளை ஆகியோரே இவ்வாறு மரணமடைந்தவர்கள் ஆவர்.
இவ்விபத்து குறித்த விசாரணைகளை பெர்த் பொலிஸார் மேற்கொண்டுவருகின்ற அதேநேரம் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் 1800 333 000 என்ற எண்ணில் அழைத்து இவ்விபத்து குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14.
More information and support with mental health is available at and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.