தெலுங்குப்பின்னணி கொண்ட Hemambaradhar Peddagamalla -Rama Batthula தம்பதியர் அவர்களது உறவினர் ஒருவரின் இறுதிநிகழ்வில் பங்கேற்பதற்காக அடிலெய்டிலிருந்து குழந்தைகளுடன் சென்றிருந்த நிலையில், இக்குடும்பம் பயணம் செய்த வாடகைக்கார் ஹைதராபாத் அருகே விபத்திற்குள்ளானது.
கடந்த ஏப்ரல் 27ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் தம்பதியர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட, இவர்களது குழந்தைகளான 9 வயது Bhavagna மற்றும் 6 வயது Palvith ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இரு குழந்தைகளும் குணமடைந்துவருவதாகவும், பெற்றோர் மரணமடைந்த செய்தி குழந்தைகளுக்கு இன்னமும் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பின்னணியில் பெற்றோரை இழந்து நிர்க்கதியாகியுள்ள குழந்கைளுக்கு உதவும் நோக்கிலும், Hemambaradhar Peddagamalla -Rama Batthula தம்பதியரின் இறுதிநிகழ்விற்கெனவும் gofundme ஊடாக நிதிதிரட்டும் பணியில் அடிலெய்டிலுள்ள இந்திய சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 232,000 டொலர் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
இக்குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் எவரும் அடிலெய்டில் இல்லை எனவும் அனைவரும் இந்தியாவிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இக்குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அடிலெய்டிலுள்ள குடும்பங்கள் தயாராக இருப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய Telugu association தலைவர் Sivaji Pathuri தெரிவித்துள்ளார்.
இதேவேளை குழந்தைகளை பராமரிக்கும்வகையில் அவர்களது தாத்தா பாட்டிக்கு ஆஸ்திரேலியா விசா வழங்கி அவர்களை இங்கு வரழைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் ஆஸ்திரேலியா அழைத்துவந்து இங்கு வாழவைப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு தமது அரசு தயாராக உள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய Premier Peter Malinauskas தெரிவித்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெற்கு ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த இக்குடும்பம், அங்கு பல சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அனவருடனும் மிகவும் அன்புடன் பழகிவந்ததாகவும் அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.