ஆஸ்திரேலியாவுக்கான விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

அண்மையில் வெளியான பெடரல் நிதிநிலை அறிக்கையின்படி பல விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

A man and a woman seated on a bench inside an airport.

People leaving Australia on international flights or sea transport will be slugged an extra $10. Source: AAP / Bianca De Marchi

KEY POINTS
  • working holiday மற்றும் சர்வதேச மாணவர் விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
  • Passenger Movement Charge அதிகரிப்பது என்பது ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும்போது அதிக செலவாகும் என்பதாகும்.
  • விசா பரிசீலனை காலப்பகுதியை விரைவுபடுத்த முடியுமென அரசு நம்புகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள், backpackers மற்றும் சர்வதேச மாணவர்கள் இனி அதிக விசா விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல் visitor விசா மற்றும் தற்காலிக விசா துணைப்பிரிவுகள் உட்பட பல்வேறு விசா வகைகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அரசு உயர்த்தும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 1, 2023 முதல் விசா விண்ணப்பக் கட்டணங்களை அரசு 6 சதவீதத்தால் அதிகரிக்கிறது.

Visitor 600 விசா விண்ணப்பக் கட்டணம் $40 அதிகரித்து, $150 இலிருந்து $190 ஆக அதிகரிக்கிறது.

Student 500 விசா விண்ணப்பக் கட்டணம் $65 ஆல் அதிகரித்து $650இலிருந்து $715 ஆக அதிகரிக்கிறது.

Working holiday விசா விண்ணப்பக் கட்டணம் $130 ஆல் அதிகரித்து $510இலிருந்து $640 ஆக உயர்த்தப்படும்.

Pacific Engagement விசா மற்றும் Pacific Australia Labour Mobility scheme விசாக்களுக்கு மட்டுமே அதிகரிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதிகரிக்கப்படும் விசா கட்டணங்கள் மூலம் 2023-24ல் 100 மில்லியன் டொலர்களையும், ஐந்து ஆண்டுகளில் 665 மில்லியன் டொலர்களையும் அரசு பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VISA FEES HIKE GFX.jpg
The budget contains application fee hikes for a number of visas. Source: SBS
மேலும் Passenger Movement Chargeஉம் அதிகரிக்கப்பட உள்ளது.

இதன்படி சர்வதேச விமானங்கள் அல்லது கடல்வழிப் போக்குவரத்தின் ஊடாக ஆஸ்திரேலியாவுக்கு வெளியே செல்லும் பயணிகள் ஜூலை 1, 2024 முதல் கூடுதலாக $10 செலுத்தவேண்டும். அதாவது தற்போது $60ஆக காணப்படும் இக்கட்டணம் இனிமேல் $70 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இதேவேளை விசா பரிசீலனை காலத்தை விரைவுபடுத்துவதற்கும், தற்போதுள்ள விசா செயலாக்க முறைகளை மேம்படுத்துவதற்கும், 2023-24 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் $75.8 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 12 May 2023 4:35pm
By Rashida Yosufzai
Presented by Renuka
Source: SBS


Share this with family and friends