நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி நாடாளுமன்றம் முன்பாக அகதிகள் போராட்டம்!

ஆஸ்திரேலியாவிலுள்ள ஆப்கான் அகதிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தி கன்பராவிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

Refugees and people seeking asylum from Afghanistan rally outside Parliament House in Canberra

Refugees and people seeking asylum from Afghanistan rally outside Parliament House in Canberra. Source: AAP

நேற்றையதினம் இடம்பெற்ற இப்போராட்டத்தில், நாடு முழுவதிலிருந்தும் வந்த ஆப்கான் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், அகதிகள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா வந்த அகதிகளுக்கு, நிரந்தரவதிவிட உரிமை வழங்கப்படவேண்டுமென போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
Large number of protesters from Afghanistan calling for permanent pathways to resettling in Australia.
Large number of protesters from Afghanistan calling for permanent pathways to resettling in Australia. Source: SBS News
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட Zaki Haidari என்ற ஆப்கான் அகதி, கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றபோதிலும், இங்கு நிரந்தரமாக தனது எதிர்கால வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கொருமுறை தற்காலிக பாதுகாப்பு விசாவை புதுப்பித்தபடி வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், வாழ்க்கை ஒரு இலக்கின்றி நகர்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Zaki Haidari is a Hazara refugee who helped organise the protest at Parliament House in Canberra.
Zaki Haidari is a Hazara refugee who helped organise the protest at Parliament House in Canberra. Source: Supplied/Zaki Haidari
இதேவேளை ஆகஸ்ட் 2021ம் ஆண்டு ஆப்கான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அங்கு நிலைமை பதற்றமாக இருப்பதால், ஆஸ்திரேலியாவிலுள்ள ஆப்கான் நாட்டவர்கள் அங்கு திரும்பிச்செல்லுமாறு கோரப்படமாட்டார்கள் என, குடிவரவு அமைச்சர் Alex Hawke கடந்த ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 9 February 2022 11:16am
Updated 9 February 2022 11:21am

Share this with family and friends