உங்கள் வீட்டில் பயன்படுத்தாதநிலையில் இசைக்கருவி ஒன்று இருக்கலாம். இசையைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் எண்ணற்ற நன்மைகளை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். அல்லது நீங்கள் இசைக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது சுவாரஸ்யமாக மட்டுமல்ல, சிறந்த அனுபவமாகவும் இருக்கிறது.
குழந்தைப் பருவத்திலோ அல்லது பெரியவரானதன் பின்னரோ ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொள்வதன் நன்மைகள் முடிவற்றவை.
ஒரு இசைக்கருவியை வாசிக்கப்பழகுவது உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் முழுமையாக ஒருமுகப்படுத்த உதவுகிறது என விளக்குகிறார் ஒரு பள்ளியின் music coordinator Howard Chaston.

Credit: Cavan Images/Getty Images/Cavan Images RF
ஒருவேளை குறித்த இசைக்கருவியிலுள்ள நுட்பங்களையும் சேர்த்து கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அந்த இசைக்கருவியில் நிபுணத்துவம்பெற்ற ஆசிரியரின் உதவியை நாடுவது சிறந்தது என்கிறார் வயலின் ஆசிரியரும் இசைக்கலைஞருமான Iska Sampson.
இதேவேளை உங்கள் குழந்தைக்கு இசை கற்பிப்பதற்கான வழிகளைத் தேடுகிறீர்கள் என்றால் school music programs ஒரு சாத்தியமான விருப்பத் தெரிவாக இருக்கும். இருப்பினும், உங்கள் குழந்தைக்கு கிடைக்கக்கூடிய இசைக் கல்வியின் தரம் நீங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து கணிசமாக மாறுபடும்.
மேலும் music specialist schools தெரிவும் உங்களுக்கு இருப்பதாக விளக்குகிறார் music coordinator Howard Chaston.
சில பள்ளிகளில் இசையை மட்டுமே கற்பிக்கும் தொழில்முறை இசைக்கலைஞர்கள் பணிபுரிகின்றனர்.
இதுதவிர பள்ளிக்கு வெளியே கூட ஒரு இசை ஆசிரியரை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள music store ஒன்றுக்குச் சென்றால் அவர்களிடம் அந்தப்பகுதியில் யார் யார் இசை கற்றுத்தருகிறார்கள் என்ற பல தகவல்கள் இருக்கும் என்கிறார் Howard Chaston.

Seeking out professional instruction can be a valuable choice. Credit: Edwin Tan/Getty Images
அதேநேரம் ஆன்லைனிலும் தேடலாம் என வயலின் ஆசிரியரும் இசைக்கலைஞருமான Iska Sampson பரிந்துரைக்கிறார்.
பெரியவர்களாக ஆன பின் இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது தொடர்பில் ஒருவர் சங்கடமாக உணரலாம், ஆனால் இசைப் பயணத்தைத் தொடங்குவதற்கு வயது ஒருபோதும் தடையல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
ஒரு கருவியைக் கற்றுக்கொள்வது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்கு அப்பால், ஒரு அற்புதமான சமூக நடவடிக்கையாக இருக்கும். அத்துடன் ஒரு நிறைவான மற்றும் பலனளிக்கும் முயற்சியாகவும் இது உள்ளது.
ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும்போது உங்கள் கற்றல் பாணியிலிருந்து உங்கள் ஆசிரியரின் பாணி வேறுபட்டதாக இருந்தால் நீங்கள் சோர்வடையத் தேவையில்லை. அத்துடன் அந்த இசைக்கருவியைக் கற்றுக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்றும் அர்த்தமல்ல என்கிறார் Iska Sampson.

Senior man playing mandolin and senior woman playing ukulele Source: Moment RF / Joao Inacio/Getty Images
பொருத்தமான இசைக்கருவியைக் கண்டுபிடிப்பதில் பள்ளிகளிலுள்ள music department உதவக்கூடும் என music coordinator Howard Chaston சொல்கிறார்.
உங்களுக்கென சொந்தமாக ஒரு இசைக்கருவியை வாங்க முயற்சிக்கிறீர்கள் என்றால் Second-hand music stores மற்றும் instrument repairers ஊடாக மலிவு விலையில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றாக, "Guitars Gathering Dust" போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களின் உதவியையும் நாடலாம்.
மெல்பனை தளமாகக் கொண்ட இந்த தொண்டு நிறுவனம் தேவையற்ற Guitarகளை சேகரித்து திருத்தியமைத்து அவற்றை இசைக் கல்வித் திட்டங்களுக்கு நன்கொடை அளிக்கிறது.
நீங்கள் விரும்பும் இசைக்கருவியை வாசிக்கப்பழகிவிட்டீர்கள் என்றால் அடுத்தகட்டமாக ஏதேனுமொரு இசைக்குழுவில் சேர ஆர்வமாக இருந்தால், உங்கள் பகுதியில் உள்ள சிறிய சமூக சங்கங்கள், folk groups மற்றும் இசை விழாக்களைத் தேடி அதில் இணைந்துகொள்ளலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.